சேலத்தில் திருமணம் முடிந்த கையோடு திருமண கோலத்தில் மாணவி ஒருவர் தேர்வு எழுதினார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தமிழ் இலக்கியா. இவர் வாழப்பாடி அடுத்த பருத்திக்காடு பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் எம் ஏ ஆங்கிலம் முதுநிலை படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் இலக்கியாவிற்கு நான்காவது செமஸ்டர் ஆங்கில மொழி டீச்சிங் மற்றும் பாடத் தேர்வு நடைபெற்றது. இதே வேளையில் அவருக்கு திருமணமும் நடைபெற்றது. இதனால் திருமணம் முடிந்தவுடன் வரவேற்பில் கூட கலந்து கொள்ளாமல் திருமண கோலத்தில் தேர்வுக்கு வந்தார். சமீப காலமாக மாணவிகள் திருமண கோலத்தில் தேர்வு எழுத வருவது அதிகரித்துள்ளது. இதனை எந்த எதிர்ப்பு இன்றி கல்லூரி நிர்வாகமும் மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்து வருகின்றன.