நவராத்திரியில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி….. 3 தெய்வீக தெய்வங்களை வழிபடுவதன் முக்கியத்துவம் என்ன?…!!!!

புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் முப்பெரும் தேவியாரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடைசியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என்று மூன்று தேவிகளின் வழிபாடு முக்கியத்துவம் ஆகும்.

துர்க்கை வழிபாடு:

நெருப்பின் அழகு, ஆவேச பார்வை, வீரத்தின் தெய்வம், கொற்றவை, காளி என்று அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும் முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அரகனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டால். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது. வெற்றியை கொண்டாடிய 10 ஆம் நாள் விஜயதசமி நாள் ஆகும்.

லட்சுமி தேவி:

மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம், விஷ்ணு பிரியா, சக்தி என்று பல பெயருடன் அழைக்கப்படுபவர். இவரை நான்கு நாட்கள் எப்போதும் யானைகள் உடன் நீராடிக் கொண்டிருக்கும் செல்வ வளம் தந்து வறுமை அகற்றி அருள் புரிபவள் திருப்பதியில் உள்ள திருக்கானூரில் லட்சுமிக்கு தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி தேவி :

வைரத்தின் அழகு, அமைதி பார்வையுடன் அழகாக பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம். பிரம்மபுரியை, ஞானசக்தி, சரஸ்வதி தேவிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனி கோவில் உள்ளது. நவராத்திரியின் ஆறாவது ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது சரஸ்வதியை வழிபாடு செய்வது முறை. இது தேவியின் அவதார நாள். பல குழந்தைகள் கல்வியை இன்றுதான் தொடங்குவார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.