நவராத்திரியின் கொண்டாட்டமும்….. மூன்று தேவிகளின் 9 இரவுகள்…. இதோ உங்களுக்காக….!!!!

நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் எப்படி செய்வது? நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் என்ன பெருமைகள் உள்ளன என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் செய்து வழிபடுகிறோம். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே நவராத்திரியின் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. நவராத்திரி திருவிழா கொண்டடுவதால் நம் ஆன்மீக ஆற்றல் வெளிப்படுகின்றது. நம் ஆன்மீக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம். ஒன்பது இரவுகள் என்று பொருள்படும் நவராத்திரி துர்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள்.

துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரை இவ்வுலகில் வழிபட காரணம் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் அழிந்து நேர்மறை குணங்களை வளர்க்கும் பண்புகளும் நற்குணங்களும் இந்த மூவரின் இடம் உள்ளது. நம்மால் சிவன் எனும் பெரும் சக்தியை மூன்று சக்திகளின் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும். ஆன்மீக முன்னேற்றத்தின் வெவ்வேறு கட்டங்கள் நவராத்திரி கொண்டாட்டங்களில் பிரதிபலிக்கின்றது. முதல் மூன்று நாள் துர்காவை வழிபடுகிறோம். அவர் சக்தியின் அம்சமானவர். நம் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அழித்து நமது புலன்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும் செயல்முறை ஒத்தாகும்.

அதற்கு அடுத்த மூன்று நாள் லட்சுமியை வணங்குகிறோம் லட்சுமி என்பது மொத்த செல்வம் மற்றும் சிறப்பின் அடையாளம். நவராத்திரியின் கடைசி மூன்று நாள் அறிவின் உருவமான சரஸ்வதியை வணங்குகிறோம். ஒரு சுத்தமான வெள்ளை புடவை அணிந்து இருப்பதாக சித்தரிக்கப்படும் இவர் கல்வியின் அடையாளமாக விளங்குகிறார். ஆகவே வழிபாட்டின் ஒவ்வொரு கட்டத்தின் முக்கியத்துவமும் தெளிவான விளக்கத்தை தருகிறது. முதலாவது எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும் . இரண்டாவது நல்லொழுக்கங்கள் வேரூன்ற வேண்டும்.  தேவையான மனத்தூய்மையை பெற்ற பிறகு மூன்றாவது ஆன்மிக அறிவை பெற வேண்டும்.

அப்போதுதான் சாதக ஆன்மீக வெளிச்சத்தை அடைவார்கள். துறவம் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு விஜயதசமிகு தினம் ஒரு புனித தினமாக கொண்டாடப்படுகின்றது. நவராத்திரி என்பது ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல ஒரு சாதாரண மனிதர்களுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது. ஒரு மனிதன் வாழ்வின் தண்டனைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமாக துர்க்கையை வழிபட வேண்டும் என்று கூறுகின்றனர். இப்படி ஒவ்வொரு தேவியரும் நாம் வணங்குவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதனை நாம் நவராத்திரி தினங்களில் கொண்டாடுவது என்பது மேலும் சிறப்பானது.