நவம்பர் 29… உருவாகும் புதிய புயல்… இந்த இடங்களில் பாதிப்பு அதிகம்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடிய குறைந்த அழுத்த பகுதி தமிழ்நாட்டில் அதிக மழையை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் புயல் நேற்று முன்தினம் இரவு பதினொன்றரை முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

புயலின் தாக்கம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த சில மணி நேரத்தில் தாம்பரத்தில் 31 சென்டிமீட்டரும், புதுச்சேரியில் 30 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. புயல் புதுச்சேரிக்கு வடமேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவியதாக கூறப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா மாநில பகுதிக்கு செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதனிடையே வரும் 29ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி முதல் 72 மணி நேரத்திற்கு வளைகுடாவில் புதிய குறைந்த அழுத்தம் உருவாகி மத்திய தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

வங்கக்கடலில் நவம்பர் 29ஆம் தேதி உருவாகும் குறைந்த அழுத்த பகுதியால் தமிழகத்தில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடிய குறைந்த அழுத்த பகுதியால் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருதுஞ்சய மொகாபாத்ரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *