நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை…. திடீர் மாற்றம்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்,அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அரசு இன்னும் தயாராகவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் ஆதிதிராவிட பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு மாலை 4.15 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *