நவம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் இயங்கி வரும் வங்கிகள் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகள் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொது மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வங்கிகள் சிறப்பாக வழங்கி வருகின்றன.அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக உள்ளது. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அதன்படி நவம்பர் மாதத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் பொது விடுமுறை எதுவும் இல்லாததால் வங்கி விடுமுறை நாட்கள் மிக குறைவாகவே உள்ள நிலையில் நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் வங்கி விடுமுறை நாட்கள்:

நவம்பர் 6 – ஞாயிறு

நவம்பர் 12 – இரண்டாம் சனி

நவம்பர் 13 – ஞாயிறு

நவம்பர் 20 – ஞாயிறு

நவம்பர் 26 – நான்காம் சனி

நவம்பர் 27 – ஞாயிறு