நல்ல வேளை முழிச்சிட்டேன்..! அச்சத்தில் தப்பியோடிய மர்ம நபர்கள்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நற்குணம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சந்திரா (56) என்ற மனைவி உள்ளார். சந்திராவிற்கு குழந்தை இல்லை. மேலும் கணவரும் இறந்துவிட்டார். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலர் ஜன்னலை உடைத்து சந்திராவின்

வீட்டிற்குள் திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சத்தம் கேட்டு சந்திரா எழுந்துள்ளார். அதனை கண்ட மர்மநபர்கள் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் சந்திரா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.