தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில்  மாணவியின் இறப்பில் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், பரிகி காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் மைத்துனரை கைது செய்தனர். கைதான 25 வயது எர்ரகடப்பள்ளி அனில் என்பவர், உயிரிழந்த பெண்ணின் மீது கடந்த ஒரு வருடமாக காதல் கொண்டிருக்கிறார். இதனிடையே அந்த பெண் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகத்தின் படி அனில், அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.