நரை நீக்கும் தைலம் உங்களுக்கு தெரியுமா…? அப்ப தெரிஞ்சுக்கோங்க..!!

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தீர்வு அளிக்கும் வகையில் இந்த தைலம் பயன்படுகின்றது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.