நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்…. அதிமுக எம்எல்ஏ ஆதரவு….!!

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் இலவச வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பொதுச் செயலாளர் கருணாகரன் மாவட்ட கவுன்சிலர் ராமசாமி அதிமுக செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்கள் மனுவில் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் இடம் வழங்கினார். அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.