நரிக்குறவர்கள், இருளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும்…. உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அடுத்த 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனைதொடர்ந்து நலத்திட்ட உதவிகள் தயாராக உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வழங்குவதற்கு காலதாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் மழை பாதிப்பு குறைந்தவுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி விடலாம் என்று கேட்டபோது, அதனை மறுத்த ஸ்டாலின் தானே நேரில் சென்று அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியினங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கலைஞர் ஆட்சிக்காலத்தில் திருநங்கைகளுக்கு வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தற்போது மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு ரேஷன் கார்டு முதல் சாதி சான்றிதழ் வரை அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதன் மூலம் திமுக அரசு அம்மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *