“நயனின் திருமணத்தில் மூன்று பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்”…. குவிந்து வரும் லைக்குகள்….!!!!!!

நயன்தாராவின் திருமணத்தின்போது சாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.

இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ஏஆர்.ரகுமான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.

https://www.instagram.com/p/Ce0pU92PUbJ/?utm_source=ig_embed&ig_rid=9c5ee2bc-2d45-4b15-89c8-6187408279de

திருமணத்தின்போது ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவருடைய மகன் மற்றும் ஷாருக்கான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரகுமான் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கின்றார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *