“நயனின் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த ரஜினி”…. காரணம் குறித்து பேசி வரும் ரசிகாஸ்….!!!!

நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்து தந்த ரஜினி குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.

இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.

நயனுக்கு ரஜினி தான் தாலியை எடுத்துக் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். இதனால் ரசிகர்கள் நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் பாராட்டினார்கள். இந்த நிலையில் நயன்தாரா ஏன் ரஜினி கையால் தாலி எடுத்துக் கொடுக்கச் சொன்னார் என்பதற்கான வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

அஜித் சார், ரஜினி சார் எல்லாம் ஏன் பெரிய ஸ்டாராக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் மிகவும் தன்னடக்கமானவர்கள். இவர்கள் இருவருமே பெண்கள் என்றால் அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள். இரண்டு பேருமே யாராக இருந்தாலும் ஒரு பெண் அவர்கள் முன்னாடி வந்தார்கள் என்றால் அவங்க பேசணும்னு இருந்தால் அவர்கள் எழுந்து தான் பேசுவார்கள். உட்கார்ந்து பேசவே மாட்டார்கள் என முன்னதாக நயன்தாரா பேசியதைரஜினி ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *