“நம்ம மக்களுக்காக படம் பண்ணுவோம்”…. ஒரே வார்த்தையில் நெகிழ வைத்த நடிகர் விஜய்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லியோ பான் இந்தியா படமாக எடுக்கப்படுவது குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் பதில் அளித்துள்ளார். இது பற்றி அவர், பான் இந்தியா படமாக எடுக்கலாம் என விஜய் இடம் சொன்னபோது, அதெல்லாம் வேண்டாம், நம்ம மக்களுக்கான படம் பண்ணலாம் என்று சொன்னார். நாங்கள் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்று கூறி ஸ்கிரிப்ட்டை மாற்றினோம். பல நடிகர்கள் வந்தால் அது பான் இந்தியா படம் அல்ல. கதை தான் அதை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply