நமீதாவுக்கு இரட்டை குழந்தைகளா?….. எப்போம்? சொல்லவே இல்லையே…. ரசிகர்களின் குழப்பத்திற்கு விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானவர் நமீதா. இவர் முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து விஜய், அஜித் நடிகருடன் நடித்த நமிதா கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். மனம் அழுத்தத்தால் தான் உடல் நலம் அவ்வாறு மாற்றியதாக குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சியில் மட்டுமே தலை காட்டி வந்த நமீதா கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிலிருந்து வெளிவந்ததும் தனது காலதர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நமீதா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதே குறைத்துக் கொண்டார்.

அதன் பிறகு கடந்த மே மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை வலைதளத்தில் நமீதா தெரிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு சென்னை சோளிங்கநல்லூர் அக்கறையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு நமிதாவும் அவரது கணவரும் இரண்டு கை குழந்தைகளுடன் கையில் தூக்கிக் கொண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நமீதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதா? என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். இது குறித்து நமிதா தரப்பில் விசாரித்த போது, நமிதாவுக்கு கடந்த ஜூலை மாதமே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் பிரசவமான தகவலை வெளியே தெரிவிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாகவும் பெயர் சூட்டு விழாவில் குழந்தை பிறந்த விவரத்தை அறிவிக்கலாம் என்று இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் குழந்தைகளை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நமிதாவுக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் ரசிகர்கள் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *