மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 288 தொகுதிகளை கொண்டது மகாராஷ்டிரா பேரவை நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பிறகு 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அவர் நாட்டு மக்களுக்கு கூறியதாவது, நமது நாடு “விக்சித் பாரத்” என்ற இலக்குடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா முழுவதும் மகாயுதி மற்றும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நாடு முன்னேற பாடுபடுவதால் தான் பாஜக மற்றும் கூட்டணி அரசை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என பேசியுள்ளார்.