மும்பையை சேர்ந்த நபார்டு வங்கியானது மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலமாக நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 102 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டம், டிப்ளமோ, முதுகலை மற்றும் முதுகலை பட்டய படிப்பில் 60% மதிப்பெண்களுடன் அந்தந்த பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.