நண்பர்களுடன் சென்ற ஆசிரியர்…. விபத்தில் சிக்கி பலியான சோகம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ஆசிரியர் விபத்தில் உயிரிழந்த வழக்கில் வாலிபருக்கு நீதிபதி 15 மாதம் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சரவணன் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் காரில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ரிக் வண்டி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணன் இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரிக் வண்டி ஓட்டுநரான அமல் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அமலுக்கு 15 மாத சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *