
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் தபஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரி மாணவர். இவர் நேற்று இரவு தன்னுடைய நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதாவது நொய்டாவில் உள்ள அவருடைய நண்பன் தன் வீட்டில் பார்ட்டி கொடுத்ததால் அதில் கலந்து கொள்ள தபஸ் என்றுள்ளார்.
இந்த பார்ட்டி ஏழாவது மாடியில் நடைபெற்ற போது அனைவரும் மது அருந்தினர். அப்போது மது போதையில் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார் தபஸ். இதில் அந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.