பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் ரூ. 1 லட்சம் வரையும், வேட்பாளர்கள் ரூ.50,000 வரையும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பேச்சாளர்களின் செலவுக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேல் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும்.