சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரத்தில் போலீசார் முரளி மனோகரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட முரளி மனோகர் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் முரளிக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.