நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டம்…. ரூ.12 லட்சம் கடனுதவி… மகிழ்ச்சியடைந்த குழுவினர்….!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி 320 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ. 6 லட்சம் என 12 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு சலவை பெட்டி மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சேகர், மாவட்ட வருவாய் ஆய்வாளர் குமரேஷ்வரன், துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உட்பட பலரும் பங்கேற்றனர்.