நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டம்… மொத்தம் 318 மனுக்கள்… மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நாற்காலிகள்…!!

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அதன்படி கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறையின் சார்பில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 5 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அலுவலர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.