கோயம்புத்தூர் மாவட்டம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
அப்போது அரசு பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றது. இதனை கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் பேருந்தை பின்னால் இருந்து தள்ளினர். இதை அடுத்து பேருந்து சிறிது நேரத்தில் ஸ்டார்ட் ஆனது இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.