நடுரோட்டில் கவிழ்ந்த பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

அரசு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து அரசு பேருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கார்த்திகேயன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஆறுமுகச்சாமி(47) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலமரமேடு ஆசிரமம் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற விபத்துக்குள்ளான பேருந்தை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.