தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இன்று நடிகர் விக்ரம் தன்னுடைய 58-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தங்கலான் படம் குழு தற்போது சிறப்பு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் நடிகர் விக்ரம் தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.