பாலிவுட்டில் 70-களில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரீனாராய். அண்மையில் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இவர் திரையுலகில் அறிமுகமான காலத்தில் எப்படி காட்சியளித்தாரோ கிட்டத்தட்ட அதேபோன்ற தோற்றத்தில் தான் நடிகை சோனாக்சி சின்ஹாவும் உள்ளார். சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரீனாராய் அவ்வளவாக வெளியில் பேசப்படவில்லை. எனினும் நடிகை சோனாக்சி சின்ஹா நடிக்க வந்தபின் இவர்களது உருவ ஒற்றுமை பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. தற்போது ரீனாராயை வைத்து படங்களை தயாரித்திருக்கும் சீனியர் தயாரிப்பாளர் ஒருவர் இன்னொரு ஆச்சரியமான தகவலை கூறியுள்ளார்.

அதன்படி பல ஆண்டுகளுக்கு முன்னதாக சோனாக்சியின் தந்தை சத்ருகன் சின்ஹா, ரீனாராய் போன்றோர் இணைந்து நடித்தனர். அந்நேரத்தில் சத்ருகன் சின்ஹா மீது ரீனாராய் காதலில் விழுந்தார். அப்போது ஹத்கடி என்ற படத்தில் சத்ருகன் சின்ஹா, சஞ்சீவ்குமார் போன்றோருடன் சேர்த்து ரீனாராயும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்ய சென்றார் அந்த தயாரிப்பாளர். இந்நிலையில் சத்ருகன் சின்ஹா தன் காதலை ஏற்றுக்கொண்டால் தான் இப்படத்தில் தான் நடிப்பேன் எனவும் அப்படி இல்லை எனில் 8 நாட்களுக்குள் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொள்வேன் எனவும் கண்ணீருடன் ஒரு நிபந்தனை விதித்தாராம் ரீனா ராய். இருப்பினும் அப்போது சத்ருகன் சின்கா ஏற்கனவே திருமணமாகி இருந்தார்.

ரீனாராயின் இந்த காதலையும் அவரது கோரிக்கையையும் கேட்டு சத்ருகன் சின்ஹாவும் கண்ணீர் விட்டாரே தவிர்த்து அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பின் ரீனாராய் மோசின் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு பாகிஸ்தானில் செட்டிலாகிவிட்டார். இருந்தாலும் சத்ருகன் சின்ஹாவின் மனைவி வாயிலாக பிறந்த குழந்தையான சோனாக்சி, ரீனாராய் உருவத்திலேயே அச்சு அசலாக இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது என்று தன் வியப்பை அந்த தயாரிப்பாளர் வெளிப்படுத்தியுள்ளார்.