நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள்… பிரபல இயக்குனர் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்காக கிரிக்பாட்டி பட இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ராஷ்மிகாவுக்கு கிரிக்பாட்டி பட இயக்குனர் ராகிஷ் ஷெட்டி ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்காக நடிகை ராஷ்மிகாவை ஆடிஷன் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.