தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த  படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில்  நடிகை ராஷ்மிகாவிடமிருந்து சுமார் ரூ.80 லட்சம் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்மிகா அதிகம் நம்பிய மேனேஜரே இந்த மோசடி செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ராஷ்மிகா ரசிகர்கள் இடையே விவாதம் நடந்து வருகிறது.  ஆனால் இது குறித்து நடிகை ராஷ்மிகா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தற்போது நடிகை ராஷ்மிகா கைவசம் மூன்று அல்லது நான்கு படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.