நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா… டுவிட்டரில் அவரே வெளியிட்ட பதிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடிகை நிவேதா தாமஸ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி  வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை நிவேதா தாமஸ் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள வக்கீல் சாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை நடிகை நிவேதா தாமஸ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள். மாஸ்க் அணியுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.