நடிகை நயன்தாராவின் ‘நிழல்’… பரபரப்பான ட்ரைலர்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா நடிப்பில் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

மேலும் இவர் மலையாளத்தில் நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்துள்ள நிழல் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் நிழல் படத்தின் பரபரப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.