தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியல்களில் நடிகை தேவயானி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தேவயானியை இயக்குனர் களஞ்சியம் படப்பிடிப்பு தளத்தில் வைத்து மோசமான முறையில் டார்ச்சர் செய்ததாகவும் அதை என்னுடைய இரண்டு கண்ணால் பார்த்தேன் எனவும் நடிகை விஜயலட்சுமி ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதாவது பூந்தோட்டம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து களஞ்சியம் தேவயானியை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும் அவருடைய அந்த குணத்தால் தான் தற்போது வரை வளர முடியாமல் இருப்பதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார். மேலும் விஜயலட்சுமியின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.