நடிகை தற்கொலை முயற்சி…. ஹரி நாடார் கைது….!!!!

விஜயலட்சுமி என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகமாக கன்னட மொழிகளில் நடித்துள்ளார். சில தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அப்போது அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் ஹரிநாடார் பண மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருக்கிறார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அனுமதியின் பெயரில் ஹரி நாடாரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *