நடிகை சித்ரா மரணம்… புதிய பரபரப்பு… ஆர்டிஓ அறிக்கை…!!!

நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ நடத்திய விசாரணையில் 250 பார்க்க விசாரணை அறிக்கை போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சித்ரா. அவர் கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அதனால் சித்ரா மரணம் தொடர்பாக பத்தாம் தேதி முதல் விசாரணை நடத்திய ஆர்டிஓ 250 பக்க விசாரணை அறிக்கையை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து ஆர்டிஓ தரப்பில் கூறுகையில், “சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு வரதட்சனை கொடுமை காரணம். வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. மேலும் சித்ராவிற்கு அதிமுக எம்எல்ஏ தொந்தரவு கொடுத்ததாகவும், தற்கொலை செய்துகொண்ட ஓட்டலுக்கு அமைச்சர் ஒருவரின் கார் வந்ததாகவும் இதற்கு முன்னதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.