நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா…? இணையத்தில் வைரலான தகவல்…!!!!!

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த வருடம் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்துள்ளனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் தற்போது இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்கள். சில மாதங்களுக்கு முன் நாகசைதன்யாவும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் சோபிதாவை தனது வீட்டிற்கு நாகசைதன்யா அழைத்து சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.  இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு பட உலகினர் பேசி வந்தனர். இந்த நிலையில் நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி இருக்கிறது ஆனாலும் சமந்தா தரப்பில் இதனை மறுத்து இருக்கின்றனர்.