நடிகை சமந்தாவின் “சாகுந்தலம்”… ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஆக வளமுடன் சமந்தா யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சாகுந்தலம்‌ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை குணசேகர் இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ள நிலையில், மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகைகள் அதிதி, மதுபாலா மற்றும் கௌதமி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், பிப்ரவரி 17-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளதால் தற்போது சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.