தெலுங்கு திரை உலகில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான “சிவா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா. 35 ஆண்டுகளாக படங்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் இவர் தற்போது புதிய சர்ச்சை வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் இயக்கியுள்ள வியூகம் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அந்த படத்தில் நடித்துள்ள நடிகை ஒருவரோடு இணைந்து நைட் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு, கையில் சிகரெட் மற்றும் மதுபானத்துடன் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.