நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு…. 4 பேர் கைது…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!!

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு சிவப்பு நிற காரிலில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினார். இது குறித்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், செப்டம்பர் 26ம் தேதி இரவு சிறப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினார். அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும் இந்த புகாரில் இணைத்துள்ளோம். எனவே இந்த புகாரை ஏற்றுவிசாரணை மேற்கொண்டு விஷால் வீட்டை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரும் புதுக்கோட்டையை சேர்ந்த சிவில் இஞ்ஜினியர் மணிரத்னம், சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரவீன் குமார், அண்ணாநகரைச் சேர்ந்த மீன் வியாபாரியான ராஜேஷ், மற்றும் அதேபகுதியில் ஓட்டல் நடத்தி வரும் சபரீஸ்வரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவம் நடந்தபோது அவர்கள் குடி போதையில் இருந்ததாகவும், அவர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷால் வீட்டின் மீது கல்பட்டு கண்ணாடி உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.