நடிகர் விஷாலின் புதிய படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் இணைந்து எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் துப்பறிவாளன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது . இந்நிலையில் நடிகர் விஷாலின் 31 -வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை து.பா சரவணன் இயக்குகிறார். மேலும் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.