தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். இவர் தற்போது படங்களில் அப்பா வேடம் மற்றும் குணசித்திர இடங்களில் நடித்த வருகிறார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் youtube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் ரஜினி மற்றும் அஜித் சூப்பர் ஸ்டார் இல்லை என்று நான் சொல்லவில்லை.
நடிகர் விஜய் சூப்பர் சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று தான் சொன்னேன். ரசிகர்களை கவரும் எல்லா நடிகர்களும் சூப்பர் ஸ்டார் தான். நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார்க்ள் தான். நான் அவர் சூப்பர் ஸ்டார், இவர் சூப்பர் ஸ்டார் என்று சொல்லவில்லை. மேலும் வாழ்க்கையில் சாதிக்கும் எல்லோரும் சூப்பர் ஸ்டார்கள் தான் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது