தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா, குஷ்பூ, ஜெயசுதா உட்பட பலர் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. பொதுவாக விஜய் தனது பட விழாக்களில் தன் மனைவி சங்கீதாவுடன் பங்கேற்பதுதான் வழக்கம். ஆனால் இந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று அட்லி வீட்டு சீமந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா பங்கேற்கவில்லை.

இதற்குரிய காரணம் குறித்து பல்வேறு விஷயங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, விஜய்யின் மகள் மற்றும் மகன் என இருவரும் வெளிநாட்டில் படித்து வருவதால் சங்கீதா அவர்களுடன் இருந்து வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.