“நடிகர் விஜய்-சங்கீதாவும் விவாகரத்து செய்யவில்லை”…. வெளியான புது தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டதாக சமீப காலமாகவே இணையதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதெல்லாம் பொய் தகவல்கள் என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் இரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் சங்கீதா விஜயுடன் சென்னையில் உள்ள வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் சங்கீதா தன்னுடைய தந்தையை பார்ப்பதற்கு லண்டன் செல்லவில்லை என்றும் விஜய் மற்றும் சங்கீதா ஒற்றுமையாக தான் வாழ்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் விஜய் மற்றும் சங்கீதா குறித்த விவாகரத்து சர்ச்சைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.