“நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் விவாகரத்து நடந்தது உண்மையா”…? தளபதியின் மேனேஜர் விளக்கம் ….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாக சில காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது விஜயின் மேனேஜர் ஜெகதீஷ்  விவாகரத்து குறித்து பேசி உள்ளார். அவர் நடிகர் விஜய்யும் சங்கீதாவும் விவாகரத்து செய்யவில்லை எனவும் விவாகரத்து பற்றி வந்த செய்திகள் முழுக்க முழுக்க பொய் என்றும் தெரிவித்துள்ளார். இந்த செய்திகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று தயாரிப்பாளரும் நடிகருமான கோபியும் விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த இரண்டு மாதமாக விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க பொய். ரசிகர்கள் சண்டை என்பது வேறு. அவர்களை கேலி செய்கிறோம். வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மேனேஜர் மற்றும் விநியோகஸ்தர் கோபி ஆகியோரின் விளக்கங்களால் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து தொடர்பான சர்ச்சைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply