தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் தி கோட் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று மாலை படத்தின் 2-ம் பாடல் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகியுள்ள கிளிம்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.