நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி’… பரபரப்பான ட்ரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் மாதவன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு . இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி  உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியுள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் நடிகர் சூர்யா ‘ஒரு நாயை கொல்ல முடிவு செய்துவிட்டால் அதற்கு வெறிநாய் பட்டம் கொடுத்தாலே போதும். அதேபோல் ஒரு மனிதனை தலை தூக்க முடியாத அளவிற்கு அடித்துக் கொல்ல அவனுக்கு தேசதுரோகி என்ற பட்டம் கொடுத்தாலே போதும்’ என்று பேசிய அழுத்தமான வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.