நடிகை த்ரிஷா பற்றி விமர்சித்து பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து செல்லும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

த்ரிஷா, நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு தனி நீதிபதியால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.