நடிகர் பிரபு தேவாவின் புதிய படம்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

நடிகர் பிரபு தேவா புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட திரைக் கலைஞராக வலம் வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரமாண்டமான முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா

இந்நிலையில் பிரபு தேவா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இந்த படத்தை ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது . பிரசாத்.எஸ்.என் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *