நடிகர் பிரபாஸின் “ஆதிபுருஷ்”…. அயோத்தியில் பிரம்மாண்ட டீசர் வெளியீடு…. மாஸ் அறிவிப்பு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் ராமாயண காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அதன்பின் சீதா தேவியாக கீர்த்தி சனோனும், சைப் அலிகான் மற்றும் சன்னிசிங் உள்ளிட்டோர் முக்கிய இடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரை ஓரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.