நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் டீசர்…. எப்போது வெளியீடு?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய மிரள் திரைப்படமானது அண்மையில் வெளியாகியது. இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பரத் இப்போது 50-வது படமாக “லவ்” படத்தில் நடித்து உள்ளார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் திரைப்படத்தின் தமிழ் ரீமிக்கை ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரோனி ரஃபேல் இசை அமைத்துள்ளார். அதேபோல் பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.