தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருடைய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான போது நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நெட்பிளிக்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கில் மற்றொரு நாளில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.